Home செய்திகள் இந்தியா டிஜிட்டல் இந்தியா  : மத்திய அரசின் புதிய அறிவிப்பு ! டெவலப்பர்கள், இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு…

டிஜிட்டல் இந்தியா  : மத்திய அரசின் புதிய அறிவிப்பு ! டெவலப்பர்கள், இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு…

367
0
app
Share

மத்திய அரசு டெவலப்பர்ஸ், இன்ஜினியர் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இன்னோவேஷன் மெஷின் மற்றும் நிதி ஆயோக் உடன் இணைந்து ஒரு போட்டியை நடத்துகிறது.

இந்த போட்டியின் மூலம் யார் சிறந்த மொபைல் செயலிகளை உருவாக்கி  உள்ளனரோ அவர்களுக்குப் பரிசளிக்கும் வகையில் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே உள்ள செயலிகளுக்குச் சவால்விடும் வகையில் உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் செயலிகள் போன்று இந்தியாவில் யார் உருவாக்குகின்றனரோ அவர்களுக்குச் செயலிகளைக் கண்டறிந்து அந்த செயலிகளை உருவாக்கியவர்களுக்குப்  பணமாகப் பரிசளிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளனர்.

இதே போல் 8 பிரிவுகளின் கீழ் டெவலப்பர்கள் தங்கள் செயலிகளைப் பதிவிடலாம். இதற்கு மத்திய அரசு ஜூலை 18 வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது. அதற்குள் சமர்ப்பிக்கப்படும் தங்கள் செயலிகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்து அவர்களுக்கு 45 லட்சம் வரை ரொக்க பரிசாக வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு செயலிகளும் 8 பிரிவுகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படுமாம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here