Home முகப்பு உலக செய்திகள் இந்தியாவின் ISRO பிரேசிலின் அமேசானியா-1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது..

இந்தியாவின் ISRO பிரேசிலின் அமேசானியா-1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது..

395
0
ISRO Space Station
Share

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ஆன ISRO பிரேசிலின் அமேசானியா-1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும். இந்த செயற்கைக்கோள் ஆகஸ்ட் 2020 க்குள் ‘போலார் சேட்டிலைட் ஏவுதல் வாகனத்தின் (PSLV)’ பிரைமரி பேலோட் ஆக உள்ளது. இந்த செயற்கைக்கோள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு பிரேசிலில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இது பூமியைக் கண்காணிப்பதற்கான முதல் செயற்கைக்கோளாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

அமேசானியா -1 செயற்கைக்கோள் பற்றி:
பி.எஸ்.எல்.வி ஏவும் அமேசானியா-1 செயற்கைக்கோள் அமேசான் காட்டின் ஏற்படும் விபத்துக்களை கண்காணிக்க உதவும். அமேசான் காட்டில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்துக்கள் போன்ற சிக்கலான காலக்கட்டத்தில் இந்த செயற்கைக்கோளின் பங்கு நாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். பிரேசிலிய செயற்கைக்கோள் அனுப்பும் படங்கள் தாவரங்கள் மற்றும் விவசாய பகுதிகளுக்கு உதவியாக இருக்கும்.

இந்திய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்கள் (IRS) தொடரிலிருந்து தரவைப் பெறுவதற்காக பிரேசிலியன் எர்த் ஸ்டேஷன் அமைப்பது தொடர்பாக 2014 ஆம் ஆண்டு 6 வது BRICS உச்சி மாநாட்டில் இந்தியாவும் பிரேசிலும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here