Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் உணவே மருந்து நோய்களுக்குப் பயன்தரும் சில உணவுகள் :

உணவே மருந்து நோய்களுக்குப் பயன்தரும் சில உணவுகள் :

460
0
ayrvedic
Share

நாம் அன்றாட வாழ்வில் உண்ணும் உணவில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அதனை எவ்வாறு எந்தெந்த நோய்களுக்கு தீர்வாகின்றன என்பதை இந்த கட்டுரையில் காணபோம்.
புதினா துவையல் , புதினா சட்னி வயிறு சம்பந்தமான பிரச்சனைக்கு ஒரு சிறந்த மருந்தாகும்.
ஏலக்காயைப் பொடியாக்கி நன்கு தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்டால் வயிற்று வலி, வயிற்றில் எரிச்சல், அஜீரணக் கோளாறு ஆகியவை சீராகும்.
அண்ணாச்சி பழம் அண்ணாச்சி பழத்தைத் தினமும் உண்டு வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அகலும்.
மணத்தக்காளிக்கீரை வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைக்கும் நல்ல தீர்வாகும்.maruthuvam
அவரை இலை சாற்றைத் தயிருடன் சேர்த்துச் சாப்பிட்டால் பேதி நிற்கும், வயிற்றுப்போக்கு விலகும்.
தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிடலாம்.
வயிற்றில் பூச்சி இருப்பவர்கள் வேப்பிலை இலையை நன்கு அரைத்து சாறு எடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலை மாலை என ஒரு நாளைக்கு 2 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள்  முழுவதும் ஒழியும்.
சீரகத்தை வறுத்துப் பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி குணமாகும்.
வாயு தொல்லை இருப்பவர்கள் வெள்ளைப் பூண்டைப் பசும்பாலில் நன்கு கொதிக்க வைத்துப் பருகினால் வாய்வுத் தொல்லை அகலும்.
அஜீரண கோளாறால் அவதிப்படுபவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை இஞ்சி சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் கோளாறு ஆகலும்.
வயிற்றுவலி இருப்பவர்கள் கசகசாவுடன் கருப்பட்டி மற்றும் கிராம்பு பொடி செய்து மூன்று வேளை சாப்பிட்டால் குணமாகும்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here