Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் ஒரு குடும்ப அட்டைக்கு 2 மாஸ்க் தமிழக அரசு முடிவு !

ஒரு குடும்ப அட்டைக்கு 2 மாஸ்க் தமிழக அரசு முடிவு !

344
0
shanmugam
Share

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஏராளமான ஏற்பாடுகள் அரசு மேற்கொண்டுள்ளது. தற்போது தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைக்குத் தலா இரண்டு மாஸ்க் வழங்கத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது. அனைத்து தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்குத் துணியால் செய்யப்பட்ட மாஸ்க்களை  இலவசமாக வழங்க முதல்வர்  ஆணையிட்டுள்ளார்.
எனவே தமிழகத்தில் உள்ள 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 வீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய துணியால் செய்யப்பட்ட மாஸ்க்குகளை வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இதனை அவசரகாலத் உபகரணமாக வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அரசு வருவாய் நிர்வாக ஆணையர் இதன் கொள்முதல் விலை மதிப்பை நிர்ணயம் செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளார்.அதே போல் இந்த குழுவின் தலைவராக வருவாய் நிர்வாக ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த இயற்கை பேரிடர் மேலாண்மை இயக்குநர், பொதுச் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநர், உட்பட ஆறு பேர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here