Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் மிகுந்த மருத்துவ குணமுள்ள அரியவகை மூலிகை சிவக்கரந்தை!..

மிகுந்த மருத்துவ குணமுள்ள அரியவகை மூலிகை சிவக்கரந்தை!..

2006
0
Civakarantai
Share

சிவக்கரந்தை மிகுந்த மருத்துவ குணமுள்ள அரியவகை மூலிகைச்செடி. இது நல்ல வாசனையுடையது. இந்த மூலிகையை தினமும் பயன்படுத்தினால் நமது சரும அழகையும் மேம்படுத்த உதவுகிறது.

இந்த மூலிகை செடியை பூக்கும் முன்பே கொண்டுவந்து மண்ணில்லாமல் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி வேரோடு எல்லா பாகங்களையும் இடித்து சூரணம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

மருத்துவ பயன்கள்:

சிவக்கரந்தை மூலிகை செடி இரத்தத்திலுள்ள மாசுக்களை நீக்குகிறது. சொறி, சிரங்கு, கடிப்பான் முதலிய தோல் நோய்கள் போகும். நாற்பது நாட்கள் உட்கொண்டால் மேனி அழகு கூடும்.

சிவக்கரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த வல்லது. சிவகரந்தையின் வேர் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும். சிவக்கரந்தை பொடி, மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.

சிவக்கரந்தை பொடி சிறுநீரக நோய்களை போக்க வல்லது. மேலும் இது உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை போக்கும். சிவகரந்தை பொடி நல்ல பசியை தூண்டக்கூடிய ஒரு சிறந்த மூலிகை. அத்துடன் இது இரத்தத்தில் உள்ள மாசுக்களை நீக்கும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here