Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் நாக்கின் அறிகுறிகளும்! ஆபத்துக்களும்!…

நாக்கின் அறிகுறிகளும்! ஆபத்துக்களும்!…

2294
0
Share

உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதற்கு விலை உயர்ந்த செயல்முறை எதுவும் தேவையில்லை. வேறு என்ன செய்ய வேண்டும்? ஒரு கண்ணாடியின் முன் நின்று உங்கள் நாக்கை நீட்டிப் பார்த்தாலே போதும். உங்கள் நாக்கில் நிலையே உங்களைப் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் விஷயங்களைச் சொல்லும். முக்கியமாக உங்கள் உள் ஆரோக்கியத்தைப் பற்றி தெளிவாக சொல்லும்.

நாவின் வடிவம், நிறம் அல்லது அளவு போன்றவற்றில் ஏதேனும் மாற்றங்களை நீங்கள் கவனித்தால், அது ஏதோ உங்கள் உடலில் உள்ள பிரச்சனைக்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். ஒருவரின் நாக்கில் வெளிப்படும் ஒவ்வொரு மாற்றமும் ஒவ்வொரு நோயையும் குறிக்கிறது. இப்போது நாவில் தென்படும் ஒவ்வொரு மாற்றங்களும் எதைக் குறிக்கிறது என்பதைக் காண்போம்.

மென்மையான மற்றும் பிங்க் நிற நாக்கு

1-toungue
உங்கள் நாக்கு பிங்க் அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், புள்ளிகள் மற்றும் கசப்பு ஏதும் இல்லாததாகவும், சுவை மொட்டுகள் நிறைந்ததாகவும் இருந்தால், அது ஒரு நல்ல அறிகுறியே. அதோடு உங்கள் நாக்கு கொஞ்சம் சமதளமாக இருக்க வேண்டும். ஆனால் நாக்கு மிகவும் மென்மையாக இருந்தால், உங்களுக்கு வைட்டமின் குறைபாடு இருக்கலாம். இல்லையெனில், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சிவந்த மற்றும் வீங்கிய நிலையில் நாக்கு

tongue
நாக்கு வீக்கமடைந்தும், அடர் சிவப்பு நிறத்தில் இருந்தாலும், அது வைட்டமின் குறைபாட்டிற்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். வைட்டமின் பி12 அல்லது ஃபோலிக் அமிலம் உடலில் குறைவாக இருந்தால், நாக்கின் நிறம் மற்றும் அளவில் மாற்றத்தைக் காணக்கூடும். இந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நாக்கில் விரிசல்


உங்கள் நாக்கில் விரிசல் ஏற்படுவது ஆபத்தானதாக தோன்றலாம். ஆனால் அது அவ்வளவு தீவிரமான ஒன்று அல்ல. இருப்பினும், இந்த பிரச்சனையை பல் மருத்துவர் அல்லது மருத்துவரிடம் சென்று கூறுங்கள். சில அரிய சந்தர்ப்பங்களில், இந்த விரிசல் ஆட்டோ-இம்யூன் கோளாறைக் குறிக்கும். இந்த விரிசல்கள் சுருக்கங்கள் போன்றவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். வயது அதிகரிக்க அதிகரிக்க, அவையும் விரிவடையும்.

நாக்கு புண்கள்


நாக்கில் ஏற்படும் புண்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று முற்றிலும் இயல்பானவை அல்லது மிகவும் தீங்கு விளைவிக்கும். பெரும்பாலான வாய் புண்கள் சாதாரணமானவையாகவே இருக்கும். இந்த வகை புண்கள் மன அழுத்தத்தால் ஏற்படுபவைகளாகும். இவை ஓரிரு நாட்களில் தானாக சரியாகிவிடும். இருப்பினும், இந்த புண்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்து, சிவப்பு திட்டுகளுடன் காணப்பட்டால், அது வாய் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here