Home செய்திகள் இந்தியா சிங்காரி ஆப் ஒரு கோடிக்கும் அதிக டவுன்லோட் ! டிக்டாக் தடையால் ஹிட்டடித்த இந்தியன்  ஆப் !

சிங்காரி ஆப் ஒரு கோடிக்கும் அதிக டவுன்லோட் ! டிக்டாக் தடையால் ஹிட்டடித்த இந்தியன்  ஆப் !

447
0
chingari
Share

லடாக் எல்லை பிரச்சினையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை அடுத்து மத்திய அரசு சீனாவுடன் தொடர்புடைய மொபைல் ஆஃப்களில் 59 ஆப்களை தடை செய்தது.
அதில் டிக் டாக் என்ற ஆப் இந்தியாவில் மட்டும் அதிக பயனர்களைக் கொண்டதாகும். இந்த ஆப் மூலம் தங்கள் திறமைகளை அனைத்து பயனர்களும் வெளிப்படுத்தி வந்தனர்.
ஆனால் மத்திய அரசு பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்று கூறி டிக்டாக் உட்பட 59 ஆப்களையும் உடனடியாக தடை செய்தது. அதனை அடுத்து பல்வேறு ஆப்கள் பிரபலம் அடைந்தன.
TikTok Bannedமித்ரோன் என்ற ஆப் இந்த தடைக்குப் பிறகு ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை அடுத்து இந்தியாவின் டிக்டாக் போன்றே ஓரளவிற்கு உடைய சிங்காரி கூகுள் பிளே ஸ்டோரில் ஒரு கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும் 3 மில்லியன் டவுன்லோட் -களை இந்த ஆப் பெற்றுள்ளது. டிக்டாக் -ற்க்கு பிறகு தங்கள் திறமையை வெளிப்படுத்த இந்த ஆப்பை டிக்டாக் பயன்படுத்தியவர்கள் தற்போது பயன்படுத்தத்  தொடங்கியுள்ளனர்.
இதனால் தான் இந்த சாதனை படைக்க முடிந்தது என்று இந்த ஆப் தயாரித்த சிங்காரி நிறுவனர் பிஸ்வதமா நாயக்  கூறுகிறார். அதுமட்டுமின்றி எங்கள் நிறுவனம் தொடர்ந்து தரமான சேவையை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது முழுக்க முழுக்க இந்திய ஆப் ஆக இருக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமாக உள்ளது. எனவே பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு விற்க மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளார். தற்போது இதில் தமிழ், தெலுங்கு,  மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி, குஜராத்தி என 10 வெவ்வேறு மொழிகளில் பயன்படுத்தும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here