Home கட்டுரை குடும்பத் தலைவியின் 3 தலையாய கடமைகள் ! இதில் தாமதம் காட்டக்கூடாது…

குடும்பத் தலைவியின் 3 தலையாய கடமைகள் ! இதில் தாமதம் காட்டக்கூடாது…

546
0
tamiltraditional
Share

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்பத்தலைவியானவள் காலை முதல் இரவு தூங்குவதற்கு முன்பு வரை இந்த மூன்று விஷயங்களில் தாமதம் காட்டக் கூடாது அவை என்னென்ன என்பதை விரிவாகக் காண்போம் :
காலை எழுதல் :
குடும்பத்தலைவியானவள் காலை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் 4 முதல் 6 மணிக்குள் கண் விழித்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இந்த பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய காலை நேரமானது ஆக்சிஜன் அதிக அளவு கிடைக்கும் நேரமாகும். இதனால் குடும்பத் தலைவியின் உள்ளமும், உடலும் ஆரோக்கியத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். எனவே கட்டாயம் விடியற்காலை எழுவதைப் பழகிக்கொள்ள வேண்டும். அதில் தாமதமாக்கிக் கொள்ளக் கூடாது.
பூஜித்தல் :
பூஜை செய்வது என்பது குடும்பத்தலைவியின் ஒரு முக்கிய கடமையாகும். ஒவ்வொரு குடும்பத் தலைவியும் இறைவனை வேண்டி தன் குடும்பத்தைப் பாதுகாக்கிறாள்.
அப்படி இருக்கையில் பூஜை செய்வதற்குத் தாமதம் காட்டக் கூடாது. சிறிது நேரம் கழித்து பூஜை செய்து கொள்ளலாம் என்று கூறுவதை அறவே ஒழிக்க வேண்டும். இதே போல் தான் பூஜை பொருட்களைச் சுத்தம் செய்யும் போதும், கழுவும் போதும் தாமதம் காட்டக் கூடாது. பூஜை முடித்த பிறகே உணவு உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும்.
சமையல் செய்தல் :
குடும்பத் தலைவியானவள் அனைவருக்கும் உணவு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறாள். அந்த வகையில் குடும்பத் தலைவியாக இருப்பவள் சமைப்பதற்கு ஒரு போதும் தாமதிக்கக் கூடாது. விரைவாகச் சமைத்து முடித்து உணவைப் பரிமாற வேண்டும்.
நம் வீட்டிற்கு வருபவர்களைச் சற்று பொறுங்கள் இதோ சிறிது நேரத்தில் உணவு முடிந்து விடும் என்று காத்திருக்கச் செய்தல் கூடாது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here