Home செய்திகள் இந்தியா மோடி ராக்கி ! ரக்ஷா பந்தன் புதுவரவு..

மோடி ராக்கி ! ரக்ஷா பந்தன் புதுவரவு..

730
0
Share

ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் என்ற விழா சகோதர,  சகோதரி இடையே அன்பைப் பரிமாறிக் கொள்ளும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை இந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காகச் சகோதரர்  கைகளில் ராக்கி கட்டுவது இந்த விழாவில் முக்கிய பங்காகும்.

இவ்வளவு காலம் சீனாவிலிருந்து ஒரு பகுதி ராக்கி  கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கடந்த மாதம் எல்லைப்பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்ததை அடுத்து  இந்தியாவில் பல்வேறு சீன தயாரிப்புகள் பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்தனர். மத்திய அரசும் 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நரேந்திர மோடி தன்னம்பிக்கை இந்தியா என்று ஒரு அழைப்பு விடுத்தார். இதையடுத்து இந்திய வர்த்தகர்கள் அமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு இந்துஸ்தானி ராக்கியை அறிமுகப்படுத்தியது. இந்த ராக்கியை நாடு முழுவதும் ரக்சா பந்தன் கொண்டாட வேண்டுமென்று விளம்பரப்படுத்தி வருகிறது. இதனை அடுத்து இந்த ராக்கி கயிறு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சிறு குறு வியாபாரிகள்  தொழிற்சாலைகளும் வளர்ச்சி அடைந்துள்ளன. ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக வர்த்தகர் மத்தியில் கூறியிருப்பதாவது :
ஒவ்வொரு ஆண்டும் சீனாவிலிருந்து ராக்கி இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். இதனால் பணப்புழக்கம் வெளிநாடுகளுக்குச் செல்லும். ஆனால் தற்போது இந்தியாவில் ராக்கிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நாட்டின் பணம் நாட்டிற்குள்ளேயே புழக்கமாகும், வெளிநாட்டிற்குச் செல்லாது. அதே நேரம் மக்களும் இந்திய ராக்கி தான் வேண்டும் என்று விரும்புகின்றனர்.

சீன ராக்கி பணம் குறைவோ, அதிகமோ தேவையில்லை என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் இதே போல் அனைத்து பொருள்களிலும் இந்தியப் பொருட்களைத் தொடர்ந்து மக்கள் வாங்கி பயன்படுத்தினால் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சிறந்த இடத்திற்கு அதி விரைவாகச் செல்லும் என்று தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here