Home செய்திகள் இந்தியா இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது – பொருளாதார நிபுணர் அபிஜித்..

இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது – பொருளாதார நிபுணர் அபிஜித்..

352
0
Share

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி உலகின் மிகவும் மோசமாக செயல்படும் பொருளாதாரங்களில் இந்தியாவும் இருப்பதாக கூறியுள்ளார்.

நோபல் பரிசு பெற்ற மிகப்பெரிய பொருளாதார நிபுணராணா அபிஜித் பானர்ஜி காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் நாட்டின் பொருளாதார நிலையை குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியிருப்பதாவது :
உலகின் மிக மோசமாக உள்ள பொருளாதாரத்தில் இந்தியாவும் உள்ளது. இது போன்ற சிக்கலைச் சமாளிக்க மத்திய, மாநில அரசின் பொருளாதார தூண்டுதல்கள் போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் திட்டங்கள் மூலம் அணுகினால் மட்டுமே விரைவில் நாட்டின் பொருளாதாரம் எழுச்சி பெரும்.

ரிலையன்ஸ் ரீடெயிலில் குவியும் முதலீடுகள்…

தற்போது உள்ள கொரோனா தொற்று நோய்க்கு முன்பே நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெகுவாக குறைந்து விட்டது. நடப்பு நிதியாண்டின் ஜூலை – செப்டம்பர் காலாண்டிற்குள் நாடு வளர்ச்சியில் புத்துயிர் பெறும் என்று நம்பப்படுகிறது. அது மட்டுமில்லாமல் 2021ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டை விட சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here