Home அறிவியல் பூமிக்கு மேல் இருந்து சூரியன் உதயமாகும் அரிய புகைப்படங்கள்..

பூமிக்கு மேல் இருந்து சூரியன் உதயமாகும் அரிய புகைப்படங்கள்..

577
0
Share

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விண்வெளிக்கு 2 வீரர்களை அனுப்பியுள்ளது. அவர்கள் அங்கிருந்து சூரியன் உதயமாகும் காட்சியைப் படம் எடுத்து அனுப்பியுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மே மாதத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உதவியுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் வணிகரீதியாக பால்கான் 9 ராக்கெட் மூலம் விண்வெளி வீரர்கள் பாப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்குப் பயணம் செய்தனர். இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வெளியே வந்து சக விண்வெளி வீரர்களுடன் ஆய்வுப் பணியில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வுப் பணியானது முடிய 60 நாட்களாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஆய்வுப் பணி முடிந்து இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 2 தேதி மீண்டும் பூமிக்கு வர உள்ளனர்.

தற்போது பூமிக்கு மேலே 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சூரியனின் உதயத்தைப் புகைப்படம் எடுத்து அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் மூலம் சூரியன் சிவப்பு நிறத்திலிருந்து மஞ்சள் நிறம் மாறுவதைத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இது ட்விட்டர் பக்கத்தில் தற்போது டிரென்ட் ஆகியுள்ளது. புகைப்படத்தை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே 50,000 லைக் பெற்றுள்ளது.

ஒரு ஆய்வு குறிப்பில் சர்வதேச விண்வெளி நிலையம் பூமிக்கு மேல் 400 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த சர்வதேச விண்வெளி நிலையம் ஆனது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்குப் பூமியை முழுமையாகச் சுற்றி வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒரு சூரிய உதயத்தைக் காணும் அதிர்ஷ்டசாலியாக விண்வெளி வீரர்கள் உள்ளனர்.

அப்படி ஒரு நாளைக்கு 16 சூரிய உதயங்களை அவர்களால் காண முடியுமாம். இரண்டு வீரர்களும் அங்கிருந்து ஏராளமான காணொளிகளையும் புகைப்படங்களை எடுத்து அனுப்பி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளனர். ஜூலை மாத தொடக்கத்தில் விண்வெளியிலிருந்து ஊதா நிறத்தில் மின்னல் வெட்டும் காட்சி ஒன்றையும் இவர்கள் வெளியிட்டுள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here