Home செய்திகள் இந்தியா தங்கத்தை வாங்கவே முடியாதா ! ஆடி மாதம் விண்ணைத்தொடும் விலை..அதிர்ச்சியில் மக்கள்..

தங்கத்தை வாங்கவே முடியாதா ! ஆடி மாதம் விண்ணைத்தொடும் விலை..அதிர்ச்சியில் மக்கள்..

470
0
Share

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா தொடங்கியதிலிருந்தே தங்கத்தின் விலை விண்ணைத் தொடும் வகையில் உள்ளது. நாளுக்கு நாள் புது உச்சம் என்ற கணக்கில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை விட தங்கத்தின் விலை மக்களுக்கும் பெரும் பீதியை கிளப்பியது. இதனால் ஏழை, எளிய மக்கள் தங்கத்தை வாங்கவே முடியாது என்று எண்ணுகின்றனர்.

ஆடி மாதம் தங்கம் விலை குறைந்து விடும் என்று பரவலாக கூறுவர். ஆனால் பொதுமக்களுக்கு புது உச்சத்தைத் தொட்டு பொதுமக்களின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது. 22 காரட் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இனி நடுத்தரக் குடும்பத்தினரும் ஏழை,எளிய மக்களும் எவ்வாறு வாங்குவோம் என்று புலம்புகின்றனர்.

இதற்கு காரணம் உலகமெங்கும் பரவிய கொரோனா வைரஸ் தான். அதன் காரணமாக முதலீட்டாளர்கள் பத்திரங்களிலும், டாலர்களிலும், முதலீடு செய்கின்றனர் அதே போல் தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். இவ்வாறு செய்யும் போது தங்கத்தின் விலை கொள்முதல் செய்யும் கணக்கில் உயர்கிறது அதை அடிப்படையாகக் கொண்டு இந்தச் செலவை விட இதன் விலை ஏற்றம் அடைந்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here