Home ஆன்மீகம் அயோத்தி ராமர் கோவில் அடியில் 2,000 அடி பள்ளத்தில் குறிப்பேடுகள்…

அயோத்தி ராமர் கோவில் அடியில் 2,000 அடி பள்ளத்தில் குறிப்பேடுகள்…

1148
0
Share

அயோத்தியில் ராம ஜென்ம பூமி வரலாறு பற்றி அனைவரும் அறிந்ததே இந்த பிரச்சனையில் தீர்வு கண்ட பிறகு தற்போது ராமர் கோவில் கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவில் கட்டும் முன்பே கோவில் கீழ்ப்பகுதியில் 2000 அடி பள்ளத்தில் குறிப்பேடுகள் புதைக்கப்படும் என்று ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

நீண்டகால சர்ச்சைக்குப் பிறகு இராம ஜென்ம பூமி வழக்கில் 2019 இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது அதையடுத்து அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு உத்தரவிடப்பட்டது. தற்போது இதற்காக மத்திய அரசு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது. அதையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு ஏற்படுத்தியது. அயோத்தியில் ஆக., 5ம் தேதி பூமி பூஜை நடக்கிறது.

இதையடுத்து ராமஜென்ம பூமியில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளையும், தகவல்களையும் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் எந்தவித சட்டச் சிக்கலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காக முக்கியமான ஆவணங்களையும், முக்கியமான தகவல்களையும், புகைப்படங்களையும் வரலாற்றுக் குறிப்புகளையும் இந்த ராமஜென்ம பூமி ஏற்பட்ட கதைகளையும் சட்டச் சிக்கல்களையும் எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எல்லாத் தகவல்களையும் ஓர் குடுவைக்குள் வைத்து 2 ஆயிரம் அடிக்குக் கீழ் புதைத்து விடலாம் என்று அறக்கட்டளை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

ஏனென்றால் எதிர்கால சந்ததிகள் இவை தெரிந்து கொள்ள முடியும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அறக்கட்டளை உறுப்பினர்கள் காமேஸ்வரர் சவுபால் கூறுவதாவது : அயோத்தி வழக்கில் ஏற்பட்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும், எவ்வாறு இந்த கோவில் கட்டப்பட்டது என்ற விளக்கத்தையும் எதிர்கால சந்ததிகளுக்குத் தெரியப்படுத்தவும், எந்தவித சட்டச் சிக்கல்களும் எதிர்காலத்தில் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் கோவிலுக்கு அடியில் இது குறித்த குறிப்புகளைப் புதைக்க முடிவெடுத்துள்ளோம். கோவில் கட்டுமானத்திற்காக பல்வேறு புனித இடங்களிலிருந்து மண்ணை சேகரித்து வருகிறோம். மேலும் நாங்கள் எங்கள் வாழ்க்கையில் பயணித்த முக்கிய புண்ணிய நதிகளிலிருந்து பூஜை செய்வதற்காக புனித நீர் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here