Home செய்திகள் இந்தியா அனைத்து ஆரம்ப நிலை கொரோனா மையங்களையும் இழுத்து மூடியது பஞ்சாப்!…

அனைத்து ஆரம்ப நிலை கொரோனா மையங்களையும் இழுத்து மூடியது பஞ்சாப்!…

411
0
Corona Virus Ward
Share

பஞ்சாபின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைளின் ஒரு பகுதியாக ஆரம்ப நிலை மையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அனைத்து ஆரம்ப நிலை கொரோனா மையங்களையும் மூட மாநில சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநில அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இதுவரை 19 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றில் 1.19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் மொத்தம் 3,641 பேர் கொரோனாவால் இதுவரை இறந்துள்ளனர். அதே நேரத்தில் 1.02 லட்சம் பேர் மீண்டு வந்துள்ளனர். மேலும் தற்போது பஞ்சாபில் 12000’க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு..

அமிர்தசரஸ், லூதியானா, ஜலந்தர், பதிந்தா மற்றும் பிற மாவட்டங்களில் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. 47 நோயாளிகள் வென்டிலேட்டர் ஆதரவில் உள்ளனர். 291 பேர் ஆக்ஸிஜன் ஆதரவில் உள்ளனர் என்று மாநில புல்லட்டின் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கின் போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இந்தியா மெதுவாக ரத்து செய்து வரும் நிலையில், பஞ்சாப்பில் நாளுக்கு நாள் புதிய கொரோனா தொற்றுக்கள் குறைந்து வருகின்றன.

இதனால் ஆரம்ப நிலை மையங்கள் அனைத்தையும் மூடி விட்டு, புதிய நோயாளிகளை மற்ற கொரோனா சிகிச்சை மையங்களில், தனி வார்டுகளில் வைத்து சிகிச்சையளிக்க பஞ்சாப் முடிவு செய்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here