Home செய்திகள் உலகம் கொரோனாவிடமிருந்து விடுதலை ! ஆர்ப்பரிக்கும் சந்தோஷத்தில் பிரதமர் …

கொரோனாவிடமிருந்து விடுதலை ! ஆர்ப்பரிக்கும் சந்தோஷத்தில் பிரதமர் …

355
0
newzealand pm
Share

உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா தாக்கம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அதேபோல் நியூசிலாந்திலும் பிப்ரவரியில் கொரோனா தொற்று பரவல்  ஏற்பட்டது.
அங்கு 1154 பேருக்கு கொரோனா தோற்று வேகமாகப் பரவியது 22 பேர் உயிரிழந்தனர். இதனால் அதிர்ந்து போன அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் விரைவாகச் சுதாரித்துக் கொண்டார்.
இந்தியாவில் மார்ச் 22 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது போலவே நியூஸிலாந்தில் மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அங்கு சமூக பரவல் ஏற்பட்டதை ஒத்துக்கொண்ட நியூஸிலாந்து அரசு, நோய்த் தொற்று ஏற்பட்டவர்களையும் அவர் சார்ந்தவர்கள் என அனைவரையும் பரிசோதனைக்கு உள்ளாகினர். அதில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து முறையாகச் சிகிச்சை அளித்தனர். முதல் 5 வாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்தது.
அதன் பிறகு படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டது முதலில் ஹோட்டல்களில் உணவுகள் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டது. மேலும் சில முக்கிய அத்தியாவசிய தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இப்படி படிப்படியாக அனைத்து தளர்வுகளையும் நீக்கி ஜூன் 22ம் தேதி முதல் அனைத்திற்கும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாகத் திட்டமிட்டு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்ததால் அந்நாடு தற்போது ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாமல் மீண்டு விட்டது.
ஆம் கடைசியாக 17 நாட்களுக்கு முன் இருந்த நோயாளிகள் அனைவரும் குணமாக்கினார். அதன் பிறகு எந்த ஒரு நோயாளியும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. இந்த 17 நாட்களில்  யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்ற தகவல் அறிந்த பிரதமர் ஜெசிந்தா சந்தோஷத்தில் சிறிய ஆட்டம் போடவும் செய்துள்ளார்.
தற்போது நியூசிலாந்தில் பள்ளிகள், அலுவலகங்கள்,  திருமணம் மற்றும் கேளிக்கை விடுதிகள் என அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டு விட்டது. சமூக இடைவெளி தேவையில்லை என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here