Home செய்திகள் இந்தியா லாக்டோன் 6.0 தமிழக அரசு அறிவிப்பு ! 4 மாவட்டங்களுக்கு மட்டும்..

லாக்டோன் 6.0 தமிழக அரசு அறிவிப்பு ! 4 மாவட்டங்களுக்கு மட்டும்..

527
0
lock down effort prevent spread corona
Share

தமிழ்நாட்டில் மீண்டும்  முழு ஊரடங்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததால் தமிழக அரசு நடவடிக்கை.
ஜூன் 19 முதல் 30 வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிட்டதட்ட 2000 வரை தொடர்ந்து பதிவாகிறது. எனவே மருத்துவக் குழுவின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு அமைச்சர்களுடன் ஆலோசித்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த நான்கு மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த நான்கு மாவட்டங்களில் சென்னைக்கு எல்லைக்குட்பட்ட ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவர்களின் குடும்ப அட்டைக்குத் தலா 1000 ரூ வழங்கவும் முடிவு செய்துள்ளது.
இந்த நான்கு மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த முழு ஊரடங்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் 29, 30 ஆகிய இரு நாட்களில் மட்டும் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். அதே போல் அதைத் தவிரத் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களான ATM  போன்ற பணிகளுக்கு வழக்கம் போல் போக்குவரத்து இருக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன் 21, 28 ஆகிய இரண்டு நாட்கள் எந்த தளர்வுகளும் கிடையாது என்றும் அறிவித்துள்ளது. அந்த இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைகளுக்கு  மட்டுமே வெளியில் வருமாறும், அதைத் தவிர்த்து வேறு எந்த ஒரு தேவைக்காகவும் வெளியில் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் எடப்பாடி வெளியிட்டுள்ள முழு அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here