Home செய்திகள் இந்தியா நாடு முழுவதும் திரையரங்குகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!…

நாடு முழுவதும் திரையரங்குகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!…

473
0
Theater opening with heavy restrictions
Share

திரையரங்குகளை மத்திய அரசு ஏற்கனவே அனுமதியளித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 9ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வந்தாலும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வழிகாட்டு தலங்கள் திறப்பு, பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவற்றிற்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதியளித்துள்ள மத்திய அரசு, நாடு முழுவதும் அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகளையும் திறக்க அனுமதியளித்திருந்தது.

இந்த நிலையில், திரையரங்குகளை திறக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது,

இதுக்குமேல தாங்காது!. தியேட்டர்களை மூட முடிவு!.. நிறுவனம் எடுத்த அதிர்ச்சி முடிவு!…

– திரையரங்கிற்குள் வரும் ரசிகர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
– திரையரங்கிற்கு வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே திரையரங்குகளில் அனுமதிக்க வேண்டும்.
– கொரோனா அறிகுறி இருந்தால் திரையரங்கிற்கு அனுமதிக்கப்படக் கூடாது.
– திரைப்படம் துவங்குவதற்கு முன்பும், இடைவேளையின் போதும் கொரோனா விழிப்புணர்வு குறும்படங்களை திரையிட வேண்டும்.
– ரசிகர்கள் திரையரங்கிற்குள் செல்லும் போது சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.
– கவர்களில் அடைக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்களை மட்டுமே விற்க வேண்டும்.
– 50 சதவீத இருக்கைகளில் மட்டும் ரசிகர்களை அனுமதிக்க வேண்டும்.
– திரைப்பட இடைவேளையின் போது ரசிகர்கள் இருக்கைகளை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
– கூட்டத்தை தடுக்க டிக்கெட் விற்பனைக்கு கவுண்டர்கள் நாள் முழுவதும் திறந்து வைக்கப்பட வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here