Home செய்திகள் இந்தியா விரைவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவார் ட்ரம்ப் – மருத்துவ குழு நம்பிக்கை…

விரைவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவார் ட்ரம்ப் – மருத்துவ குழு நம்பிக்கை…

368
0
Donald Trumph
Share

அமெரிக்க அதிபரான உடம்பிற்கு சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் தற்போது விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரம்பிற்கு காய்ச்சல், ஆக்சிஜன் அளவு குறைந்து காணப்பட்டதால் அவர் மேரிலேண்டின் பெட்ஹேஸ்தா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதன் பிறகு காய்ச்சல் குணம் அடைந்ததாகவும் உடல் உள்ளுறுப்புகள் சீரானதாகவும் மருத்துவ குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் திங்கட்கிழமை அன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியானது.

அதிரடியாக விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் – ஏன் தெரியுமா !

ட்ரம்ப் மனைவி மெலனியாவிற்கும் கொரோனா உறுதியானதால் அவருக்கும் லேசான இருமல் மற்றும் தலை வலி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்ப் தொடர்பிலிருந்து உதவியாளர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு கொரோனா உறுதியானதால் பெரும் அச்சத்தில் உள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here