Home செய்திகள் இந்தியா போர் வேண்டாம் ! சீனா  பேச்சுவார்த்தைக்கு அழைப்பு…

போர் வேண்டாம் ! சீனா  பேச்சுவார்த்தைக்கு அழைப்பு…

414
0
china
Share

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த சில வாரங்களாகச் சீன ராணுவப் படைகள் முகாமிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் முகாமிட்டிருந்தனர். இரு நாட்டுப் படைகளும் குவிந்த வண்ணம் இருந்தன. இதனால் போர் பதற்றம் நிலவியது.
பின்பு இரு நாட்டின் ராணுவ ஜெனரல்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து இரு நாட்டின் படைகளும் சற்று பின்வாங்கின. ஆனால் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சீனப் படைகள் இந்தியா மீது தாக்குதல் நடத்தினர். இதில்
இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதே போல் எதிர்த் தாக்குதலில் சீன வீரர்களும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் இரு நாட்டிலும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இத்தகைய சூழலில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். அவர் இந்த சந்திப்பில் கூறியிருப்பதாவது :
தூதராக ரீதியிலும், இராணுவ தளபதி ரீதியிலும் ஏற்கனவே சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே நடந்ததைச் சரி, தவறு ஆராய்வதைத் தவிர்த்து பேச்சுவார்த்தை நடத்தச் சீன அரசு தயாராக உள்ளது. மேலும் இந்தியாவுடன் மேற்கொண்டு சண்டையிட விரும்பவில்லை. எனவே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here