Home செய்திகள் இந்தியா கொரோனா நோயில் உயிர் போகாமல் பாதுகாத்துக் கொள்ள வெறும் 10 ரூபாயில் மருந்து….

கொரோனா நோயில் உயிர் போகாமல் பாதுகாத்துக் கொள்ள வெறும் 10 ரூபாயில் மருந்து….

456
0
dectancyl
Share

கொரோனா வைரஸ் என்றாலே உலகம் முழுதும் நடுங்கிப் போய் உள்ளது. ஏனென்றால் இந்த கொடிய வைரசிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக ஏராளமான உயிர்ப் பலியும் ஏற்பட்டுள்ளது.
ஆனால்  தற்போது இந்த வைரசிடம் இருந்து உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வெறும் 10 ரூபாயில்  டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து  அறிமுகப்படுத்தியுள்ளது  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.
இந்த கொரோனா வைரசால் உலகம் முழுதும் இதுவரை 82 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கிட்டத்தட்ட 4.5 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது.
தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் டெக்ஸாமெதோசான் என்ற மருந்தைக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் செலுத்திப் பரிசோதித்தனர். மேலும் இதில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து கொரோனவுடன் போராடுகிறது. மேலும் ஏழை நாடுகளும் இதனைப் பயன்படுத்தலாம். உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் சேதத்தைக் குணப்படுத்த இந்த டெக்ஸாமெதோசான் பயன்படுகிறது.
ஆனால்  இந்த மருந்து கொரோனவால் பெரிதளவு பாதிக்கப்பட்டவர்களுக்கே பயன்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மற்றவர்களுக்குப் பயனளிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள்  டெக்ஸாமெதோசான் தயாரிப்பதால் இந்த மருந்து மிகவும் குறைந்த விலைக்கே கிடைக்கிறது. வெறும் 10 ரூபாய்க்கு 10 மில்லி கிடைக்குமாம்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here