Home செய்திகள் இந்தியா லடாக் எல்லை பிரச்சனையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பலி !

லடாக் எல்லை பிரச்சனையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பலி !

475
0
india china
Share

லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் இறந்துள்ளதாக A.N.I செய்தி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அதே போல் சீன ராணுவத்திற்கும் தக்க பதிலடி தரப்பட்டுள்ளதாம்.
திங்களன்று இரவு சீனா மற்றும் இந்தியா இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலில் இரு நாட்டு படைகளும் பலத்த சேதமடைந்துள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரும் ராணுவ வீரர்கள் 2 பேரும் இருந்துள்ளதாக நேற்று மதியம் செய்தி கிடைத்தது.  அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரரும் ஒருவர் ஆவார்.
அதே நேரம் சீன ராணுவப்படையில் 43 பேர் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்தது. இந்த சண்டை 0 டிகிரிக்கும் குறைவான தட்பவெப்ப நிலையில் நடைபெற்றதால் துப்பாக்கிகள் ஏதும் பயன்படுத்தவில்லை. கற்கள் மற்றும் சில பயங்கர ஆயுதங்களைக் கொண்டு நடந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் மிகவும் குறைவான தட்பவெப்ப நிலையில் சில மேடு பகுதியில் காயமடைந்துள்ளனர். அவர்களை மீட்கச் செல்லும்போது அதில் மேலும் 17 பேர்  உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதில் தமிழ்நாடு சார்பில் முதல்வர் இரங்கல்  தெரிவித்துள்ளார். அத்துடன் 20 லட்சம் பணமும் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
brahmosதற்போது மிகப் பயங்கரமான ஆயுதங்களை இரு நாட்டுப் படையினரும் குவித்து வருகின்றனர் இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அதிலும் இந்திய ராணுவம்  பிரம்மோஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்த உள்ளதாக முடிவெடுத்துள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here