Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் ரூ.250 கோடி செலவில் பாம்பன் பாலத்தில் புதிய இரயில் பாதை!.. மத்திய அரசு வெளியீடு!…

ரூ.250 கோடி செலவில் பாம்பன் பாலத்தில் புதிய இரயில் பாதை!.. மத்திய அரசு வெளியீடு!…

535
0
First Vertical Lift Railway Sea Bridge is in full swing at Rameswaram
Share

ராமேஸ்வரம் பாம்பனில் அமையவிருக்கும் நவீன வசதி கொண்ட புதிய இரயில் பாலத்தின் மாதிரி வீடியோவை இரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் இடையே கடலுக்கு நடுவே அமைந்துள்ள இரயில் பாலத்திற்கு அருகே ரூ.250 கோடி மதிப்பீல் இரட்டைதளம் கொண்ட புதிய பாலம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கான அடிக்கல்லை கடந்த ஆண்டு மார்ச்சில் பிரதமர் மோடி நாட்டினார். இதைத் தொடர்ந்து, கடலுக்கு நடுவில் பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், ராமேஸ்வரம் பாம்பனில் அமையவிருக்கும் நவீன வசதி கொண்ட புதிய இரயில் பாலத்தின் மாதிரி வீடியோவை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ளார். அனிமேசனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாதிரி வீடியோவில், புதிய பாலத்தின் வழியாக கப்பல்கள் செல்லும் போது, இரயில் பாதை திறப்பதற்கு பதிலாக மேலே தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

First Vertical Lift Railway Sea Bridge is in full swing at Rameswaram


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here