Home செய்திகள் இந்தியா மைக்ரோசாப்டிற்கு விற்க முடியாது ! டிக்டாக்..

மைக்ரோசாப்டிற்கு விற்க முடியாது ! டிக்டாக்..

300
0
Microsoft Adding Tiktok
Share

டிக்டாக் பொழுதுபோக்கு செயலியை இந்தியாவில் பயன்படுத்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசும் இந்த டிக்டாக் செயலியை தடை செய்வோம் என அறிவித்தது.

இதனால் டிக்டாக்கின் தாய் வீடு என்றழைக்கப்படும் பிரபல நிறுவனமாக விளங்கும் பைட் டான்ஸ் நிறுவனம் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிபர் டிரம்ப் டிக்டாக் செயலி அமெரிக்க நிறுவனத்திற்கு விற்றுவிட்டால் டிக்டாக் செயலி அமெரிக்காவில் பயன்படுத்த அனுமதிப்போம் என்று எச்சரித்தார்.

தண்ணீரில் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர்…

ஏராளமான அமெரிக்க நிறுவனங்கள் டிக்டாக் செயலியை வாங்க போட்டியிட்டனர். இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்குவதாக முடிவு செய்தது.

ஆனால் டிக்டாக் செயலியை பைட் டான்ஸ் நிறுவனம் பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தற்போதைக்கு டிக் டாக் விற்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் பிரபல ஸ்டோரேஜ், டேட்டாபேஸ் நிறுவனமாக விளங்கும் ஆரக்கள் நிறுவனத்திற்கு டிக்டாக் செயலியை விற்பனை செய்ய தற்போது முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here