Home செய்திகள் இந்தியா புதிய திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும் ! 25 கோடி பேர் வேலை இழப்பார்கள்.....

புதிய திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும் ! 25 கோடி பேர் வேலை இழப்பார்கள்.. மைக்ரோசாப்ட்

333
0
microsoft
Share

கொரோனா தொற்று காரணமாக உலக அளவில் 25 கோடி பேர் வேலை இழப்பார்கள் புதிய திறன்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் ப்ராட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் காரணமாக உலகம் முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர். அதிலும் ஏராளமான நிறுவனங்களிலும் முழு சம்பளம் போடாமல், சம்பளப் பிடித்தம் பணிநீக்கம், போன்றவற்றைச் செய்கின்றன. இந்த பிரச்சனை காரணமாக ஏராளமானோர் இருக்கும் வேலையையும், விட நேரிடுகிறது. இதைத் தொடர்ந்து இந்த பணிநீக்கம் தீவிரமாகும் என்று மைக்ரோசாப்ட் தலைவர் கூறியுள்ளார்.

ஏனென்றால் வேலையில் இருப்பவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் புது திறன்களைக் கற்றுக் கொண்டால் மட்டுமே சாத்தியம். இல்லை என்றால் அவர்களுக்கும் வேலை பறி போக வாய்ப்புள்ளது என்றும் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்த நிலை உலகம் முழுவதும் 25 கோடி பேருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிலும் அமெரிக்காவில் மட்டும் 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதம் வரை வேலையின்மை உயரக் காத்திருக்கிறது. அதாவது தோராயமாகக் கோடி பேர் இந்த சவாலான விஷயத்திற்கு ஆளாக நேரிடும். பல நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

2020ஆம் ஆண்டு இறுதிக்குள் 3 கோடிப் பேருக்கு டிஜிட்டல் தொடர்பான திறன்களை வளர்க்க மைக்ரோசாப்ட் பயிற்சி அளிக்க உள்ளது என்று கடந்த மாதம் தெரிவித்திருந்தோம். இணைய ஏற்றத்தாழ்வு இருக்கும் உலகில் நாம் வாழ்கிறோம். எனவே அதில் சரியாகும் வரை நாம் சற்று பொறுத்திருந்து தான் ஆகவேண்டும்.

அது சரியாகவில்லை என்றால் இந்தப் பயிற்சியில் தொடங்கினால் இந்த ஏற்றத்தாழ்வை இருக்குமே. அதனால் சரியாக நடத்த இயலாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் 16.5 கோடி பேருக்குத் தொழில் நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here