Home செய்திகள் இந்தியா GST கவுன்சில் கூட்டம் : நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கூடுகிறது..

GST கவுன்சில் கூட்டம் : நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கூடுகிறது..

281
0
Share

GST வரிவிதிப்பு முறை 2017 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இந்த வரி விதிப்பு காரணமாக மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பைச் சரிசெய்ய ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை அளித்துச் சரி செய்து விடும்.

அந்த வகையில் இன்று 41வது GST கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகிக்கிறார்.

இது தொடர்பாக மத்திய நிதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாவது :
கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான பணிகள் நடைபெறாததால் ஊரடங்கு பிறப்பித்ததன் காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான வரி வருவாய் ஏராளமாகக் குறைந்துள்ளது. ஒவ்வொரு கூட்டத்தின் போதும் அரசுகளுக்கு வழங்கும் இழப்பீடு நிதியில் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே 41வது GST கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக நடத்தப்படும் இந்த இழப்பைச் சரிசெய்ய ஏதாவது நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here