Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்!…

உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்!…

858
0
Easy way to reduce Belly
Share

தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சம் பழத்தை மிதமான வெந்நீரில் பிழிந்து குடிப்பது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைய உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியும் மேம்படும்.

தக்காளி ஜூஸ் அல்லது கேரட் ஜூஸ் தினமும் காலை வேலைகளைத் தொடங்கும்முன் குடித்து கொள்ளுங்கள். இதில் உடலுக்குத் தேவையான பீட்டா கரோட்டீன், ஆன்டி- ஆக்ஸிடென்ட், எலக்ட்ரோலைட்ஸ், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை காணப்படுகிறது.

தினசரி உணவில் பழங்கள், ஓட்ஸ், சப்பாத்தி மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். இது வயிற்றை நிரப்புவதோடு, கொழுப்பு சேராமல் பார்த்து கொள்ளும்.

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன?…

தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க உதவும். உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் முடியும்.

நீங்கள் குறைந்த பட்சம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். காலை எழுந்ததும் முக்கால் மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டு முடித்ததும் ஏழு முதல் பத்து நிமிடங்கள் மெதுவாக நடக்கலாம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here