Home செய்திகள் இந்தியா லடாக் எல்லையில் நீடிக்கும் இழுபறி ! இரு நாட்டுப் படைகளும் பின்வாங்கின…

லடாக் எல்லையில் நீடிக்கும் இழுபறி ! இரு நாட்டுப் படைகளும் பின்வாங்கின…

404
0
china india
Indian Army personnel keep vigilance at Bumla pass at the India-China border in Arunachal Pradesh on October 21, 2012. Bumla is the last Indian Army post at the India-China border at an altitude of 15,700 feet above sea level. AFP PHOTO/ BIJU BORO (Photo credit should read BIJU BORO/AFP/Getty Images)
Share

லடாக் எல்லைப்பகுதியில் கடந்த மாதம் சீனா தன் நாட்டு துறுப்புகளைச் சேர்த்த வண்ணம் இருந்தது அதைத்தொடர்ந்து இந்தியாவும் தனது ராணுவ வீரர்களை எல்லைப்பகுதியில் குவித்தனர். பின்னர் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சனை போராக மாறும் படி போனது. ஏனென்றால் இந்த கைகலப்பில் 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இதற்குப் பிறகு இரு நாட்டு ராணுவமும் தன் வீரர்களை எல்லைப்பகுதியில் குவித்த வண்ணம் இருந்தனர். இதை அடுத்து இருநாட்டுத் தரப்பிலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி இந்த பிரச்சனை உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு நேற்று இந்தியா – சீனா எல்லை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக 17ஆவது ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய மற்றும் சீன வெளியுறவுத்துறை இணைச் செயலர்களும் தரைவழி மற்றும் கடல்வழி ஜெனெரல்களும் இந்த குழுவில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய இருநாட்டு ராணுவ கமாண்டர்களும். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்துத் தெரிவித்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் கூறியதாவது :
லடாக் எல்லையில் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இரு நாட்டுப் படைகளையும் பின் வாங்க வேண்டும் என்று இரு கமாண்டர் தரப்பினரும் தொலைப்பேசி வாயிலாகப் பேசினர். அதனையே தற்போது வழிநடத்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தியா – சீனா இடையே நல்லுறவு வளர வேண்டும் பதற்றமான சூழல் விலக வேண்டுமென்று இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகமும் ஒப்புக்கொண்டதை அடுத்து கூட்டத்தில் எல்லையின் தற்போதைய நிலவரத்தை அறிந்து அதை எவ்வாறு சுமுகமாகத் தீர்ப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

எல்லையில் இரு நாட்டுப் படைகளும் பின்வாங்கினால் பதற்றத்தைக் குறைக்கலாம் என்று பேச்சுவார்த்தை  நடைபெற்றது. இதையடுத்து இரு நாட்டு ஜெனரல்  தலைவர்களும் விரைவில் பேசி இருதரப்பினரையும் பின்வாங்க இருப்பதாக ஒப்புக்கொண்டனர் இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here