Home செய்திகள் இந்தியா நடிகர் விஜய் படத்தின் 2வது பாடல் வெளியானது…

நடிகர் விஜய் படத்தின் 2வது பாடல் வெளியானது…

678
0
vathi coming
Share

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள படம் தான்  மாஸ்டர்.

இந்த படத்தின் முதல் பாடலான குட்டி ஸ்டோரி பிப்ரவரி 14 தேதி வெளியானது. இந்த பாடல் இணையத்தில் ஏராளமான சாதனைகளைப் படைத்துவருகின்றது.  இதுவரை 3 கோடி பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்ல் உள்ளது.

Kutty Story 30millionஇந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் 2வது பாடல் வெளியானது வாத்தி கம்மிங் என்று தொடுக்கும் இப்பாடல் வெளியான 1 நிமிடத்தில் 1 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த பாடலை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

vathi comingமேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை மாஸ்டர் படத்தின் மொத்த பாடல்களும் வெளியாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியைப் பிரபல தொலைக்காட்சி ஒன்று நேரலையாக்க உள்ளது.

விஜய் படப் பாடல் வெளியீட்டு விழா என்றாலே ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் நடத்தப்படும். பீகில்  படத்தின் பாடல் வெளியீட்டு விழா தாம்பரம் அருகே ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அதே போல் சர்க்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் மிகப் பெரிய அளவில் நடைபெற்றது.

பாகுபலி நடிகர் ராணாவின் அடுத்த படம், மூன்று மொழிகளில் வெளியாகிறது…
master audio launch

மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் பட  குழுவினர்கள் இந்த நிகழ்ச்சியை  நட்சத்திர ஓட்டலில் வெறும் படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் வைத்து நடத்திவிடலாம் என்று பேசிவருகின்றனர்.ஆகையால் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

 


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here