Home செய்திகள் இந்தியா இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதம் ! சர்வதேச அமைதி அமைப்பு தகவல்…

இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதம் ! சர்வதேச அமைதி அமைப்பு தகவல்…

672
0
Share

ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி மையம் சர்வதேச அளவில் அணு ஆயுதம் எவ்வளவு உள்ளது என்று  ஆய்வை நடத்தியது. அதில் இந்தியாவை விடச் சீனா மற்றும் பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளது என்று ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
இந்த சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது : சீனாவில் மட்டும் 350, பாகிஸ்தானிடம் 160 என அணு ஆயுதங்களை வைத்துள்ளனர். ஆனால் இந்தியாவோ 150 அணு ஆயுதங்கள் மட்டுமே வைத்துள்ளன.
உலக அளவில் 90 சதவீத அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்ய வைத்துள்ளது. அதிலும் அமெரிக்காவிடம் 5800-ம்  ரஷ்யாவிடம் 6375 அணு ஆயுதங்களும் வைத்துள்ளனர். 2020 ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 13400 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் சற்று குறைவுதான் கடந்த ஆண்டு 13865 அணு ஆயுதங்கள் இருந்தது.
இந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி பிரான்சில் 290, பிரிட்டனில் 215, இஸ்ரேலின் 90, வடகொரியா 30 – 40 என அணு ஆயுதங்களைப் பராமரித்துக் கொண்டுள்ளனர். இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாட்டை ஒப்பிடும்போது இவை மிகச் சிறிய நாடுகள். இந்த நாடுகள் மேலும் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் அல்லது நோக்கத்தில் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.nuclear
சீனா தங்கள் உள்ள அணு ஆயுதங்களை நவீனப்படுத்துகிறது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களிடம் உள்ள அணு ஆயுதத்தை நவீனப்படுத்தும் நோக்கில் செல்கின்றனர். மேலும் தங்கள் பலத்தை அதிகரிக்க மேலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதே போல் வடகொரியா தங்கள் நாட்டின் ராணுவத்தையும் அணு ஆயுதங்களையும் மேம்படுத்துவதில் முழு நோக்கத்துடன் உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களிடம் உள்ள எண்ணிக்கை தெரிவித்திருந்தாலும் அது முழுமையான எண்ணிக்கையாக இருக்குமோ என்று ஒரு சிறிய சந்தேகம் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை மேம்படுத்துவதில் முழு நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here