Home செய்திகள் இந்தியா லாவாவின் புதிய கீபேட் மொபைல் : இதயத்துடிப்பு ரத்த அழுத்தம் போன்றவற்றையும் பரிசோதனை செய்யுமாம்..

லாவாவின் புதிய கீபேட் மொபைல் : இதயத்துடிப்பு ரத்த அழுத்தம் போன்றவற்றையும் பரிசோதனை செய்யுமாம்..

514
0
Share

இந்தியாவின் பிரபல உள்நாட்டு மொபைல் நிறுவனமான லாவா தற்போது ரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் அளவிடும் அம்சத்துடன் புதிய மொபைல் போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. விலையும் மிகக் குறைவுதான்.

சர்வதேச செஸ் போட்டி : தமிழக சிறுவன் அரையிறுதிக்கு முன்னேற்றம் ! முதல்வர் வாழ்த்து..

லாவா நிறுவனத்தால் தற்போது தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய கீபேட் மொபைல் போனின் பெயர்தான் பல்ஸ். இந்த மொபைல் போன் பிலிப்காட் மற்றும் சில்லறைக் கடைகளிலும் கிடைக்குமாம். இதன் விலை வெறும் 1599 மட்டுமே. இந்த மொபைல் கீபேட் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனின் டிஸ்பிலே 2.5 என்ற அளவை கொண்டுள்ளது. மேலும் இந்த மொபைலில் 32 ஜிபி வரை மெமரி கார்டு விரிவாக்கம் செய்ய முடியும். எப்எம்.ரேடியோ மற்றும் இரண்டு சிம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

1800 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. மேலும் ஒரு நாள் முழுவதும் சார்ஜ் செய்தால் ஆறு நாட்கள் தாங்கும் திறன் கொண்டது. பன்மொழி டைப் பட்டன்களையும் கொண்டுள்ளது. இவை அனைத்துடனும் மனித இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தையும் மிக எளிதில் அளவீடு செய்து இதன் டிஸ்ப்ளே வாயிலாகத் தெரிவிக்கும் என்ற சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here