Home செய்திகள் இந்தியா இந்தியாவின் பாதுகாப்பு படை தலைவர் பிபின் ராவத் அதிரடி!.. சீனாவை எதிர்த்து போரிடவும் தயார்!…

இந்தியாவின் பாதுகாப்பு படை தலைவர் பிபின் ராவத் அதிரடி!.. சீனாவை எதிர்த்து போரிடவும் தயார்!…

327
0
Indian Army Ladakh
Share

சீனாவுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டால், அடுத்த கட்ட நடவடிக்கையாக போரிடவும் தயாராக இருப்பதாக பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் 15ம் தேதி அத்துமீறி இந்திய எல்லைப் பகுதிக்குள் புகுந்த சீன ராணுவத்தினருடனான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். அதேபோல, சீனா தரப்பில் ஏராளமான வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இந்தியா – சீனா எல்லையான லடாக்கில் பதற்றம் நிலவி வந்தது. எனவே, அமைதியை நிலைநாட்டுவதற்காக இரு நாட்டு தரப்பிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அதில், அமைதியை விரும்புவதாகக் கூறி வரும் சீனா, எல்லையில் வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்து வந்தது. எனவே, லடாக் எல்லை நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியபாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மூன்று படைத் தலைவர்களைச் சந்தித்து பாதுகாப்புப் படைத் தலைவர் (சி.டி.எஸ்) ஜெனரல் பிபின் ராவத் ஆலோசனை நடத்தினார்.

லடாக் எல்லை பகுதியில் கடந்த ஜூன் 15 அன்று இந்தியா- சீனா வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சீனாவுக்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டன, ஆனால் சீனா பலமுறை அமைதியை பற்றி பேசினாலும், அது இப்பகுதியில் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் (சி.டி.எஸ்) ஜெனரல் பிபின் ராவத் சனிக்கிழமையன்று, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியபாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மூன்று படைத் தலைவர்களைச் சந்தித்து லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் நிலைப்பாடு குறித்து விவாதித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெனரல் ராவத் கூறுகையில், “இந்தியா – சீனா எல்லையில் வரம்பு மீறல்கள் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஊடுருவலை தடுக்கவும், கண்காணிப்பை அதிகப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துமீறிய செயல்களை தடுக்க தற்போது அமைதியான அணுகுமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எல்லையில் அமைதியை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தை உள்ளிட்ட முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில், ராணுவ நடவடிக்கைகளுக்கும் தயாராக உள்ளோம். அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பட பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனைவரின் விருப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது,” எனத் தெரிவித்தார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here