Home செய்திகள் இந்தியா வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தியா வர அனுமதி நீட் தேர்வு எழுத!…

வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தியா வர அனுமதி நீட் தேர்வு எழுத!…

417
0
Neet Exam
Share

வெளிநாடுகளில் இருந்து நீட் தேர்வு எழுத இந்திய வரும் 4 ஆயிரம் மாணவர்களுக்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன்பு கடந்த 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த முடியுமா அல்லது வளைகுடா நாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியுமா என்று கேட்டு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டதாக தேசிய தேர்வு முகமை, கூறியிருந்தது.

மேலும், வெளிநாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியாது என்றும், மத்திய அரசு போதிய விமானங்களை இயக்கிவருவதால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, நீட் நுழைவுத் தேர்வு ரத்து இல்லை, திட்டமிட்டபடி நடத்தப்படும் எனவும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த இயலாது என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

கொரோனாவை தடுக்கும் ஹோமியோபதி மாத்திரை?.. கூவி கூவிக் கொடுத்த குஜராத் அரசு!…

மேலும், தேர்வுக்குத் தயாராக மாணவர்களுக்கு போதிய அவகாசம் கொடுத்து அறிவிப்புகள் வெளியிட்டுள்ளதால் தேர்வை ஒத்திவைக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு பதில் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தது.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் அளித்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு நீட் மையம் அமைக்க வேண்டும் இல்லை என்றால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், வெளிநாடுகளில் இருந்து நீட் தேர்வு எழுத இந்திய வரும் 4 ஆயிரம் மாணவர்களுக்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here