Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் சிரிப்பின் முக்கியத்துவம் தெரியுமா ! ஆரோக்கியமாக இருக்க வாய்விட்டு சிரிங்க..

சிரிப்பின் முக்கியத்துவம் தெரியுமா ! ஆரோக்கியமாக இருக்க வாய்விட்டு சிரிங்க..

721
0
Laughing
Share

நம் வாழ்க்கையில் சந்தோஷத்தில் தான் சிரிக்க வேண்டும் என்றல்ல, துன்பத்தில் சிரித்தால் அதை விட மகிழ்ச்சியான மனிதன் இவ்வுலகில் யாரும் இருக்க இயலாது. சிரியுங்கள் எந்த பிரச்சனை வந்தாலும் அதனைச் சிரித்தே கடந்து செல்லுங்கள். அந்த பிரச்சனை அதுவாகவே திர்ந்துவிடும். சிரிப்பதால் உடலில் ஏராளமான நன்மைகள் ஏற்படுகிறது.
smileவலி நிவாரணி :
நாம் சிரிக்கும் போது தான் நம் உடம்பில் எண்டோர்ஃபின் (Endorphin) என்ற அமிலம் சுரக்கிறது. இந்த சுரப்பி தான் உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதன் மூலம் மகிழ்ச்சியான மனிதராகத் திகழ்வீர்கள். உடல் வலி,
சோர்வு ஏதுவாகினாலும் வாய் விட்டுச் சிரிக்க வேண்டும்.  மருத்துவமனையில் நோயாளிகளைக் குணப்படுத்தச் சிரிப்பையே முக்கியமாகப் பயன்படுத்துகின்றனர்.
நீங்கள் ஸ்ட்ரெஸாக இருக்கும் போது அதை மறக்கடிக்க நிச்சயம் மகிழ்ச்சியான சூழல் அவசியம். ஏனென்றால் ஸ்ட்ரெஸாக இருக்கும்போது கார்டிசோல் (cortisol ) என்ற அமிலம் சுரக்கிறது. இதன் அளவு அதிகரித்தால்  இதயப் பிரச்சனைகள் வரும். இதைத் தவிர்க்க எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள். இதனால் கார்டிசோலின் அளவு  69 சதவீதம் குறையும் என ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். இனி கவலையை மறந்து ஸ்ட்ரெஸை துரத்தி அடிக்க வாய்விட்டுச் சிரியுங்கள்.heart
இதயப் பிரச்சனைகளுக்கு முடிவு  : சிரிக்கும் போது உள்ளிழுத்துவிடும் மூச்சால் இரத்தத்தில் ஆக்ஸிஜனேற்றம் நடக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் இதயத்திற்குச் சீராகி அதன் செயல்பாடுகளும் சிறப்பாகிறது.
மேலும் சிரிக்கும்போது இதயத்தில் ஆற்றல் சீராகி இரத்த ஓட்டமும் அதிகரித்து இரத்த அழுத்தப் பிரச்சனையைச் சரி செய்கிறது. இரத்த தசை நாளங்களையும் திறம்படச் செயலாற்றுகிறது.energy
நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் :
சிரிப்பதால் பீடா எண்டோர்ஃபின்ஸ் (Beta-Endorphins ) மற்றும் இதர ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை டி- செல் (T-cells ) உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் லிம்ஃபோசைட்ஸ் (lymphocytes) உருவாகி அதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here