Home செய்திகள் இந்தியா இயல்பு நிலைக்கு திரும்பிய இத்தாலி ! ஊரடங்கில் தளர்வு…

இயல்பு நிலைக்கு திரும்பிய இத்தாலி ! ஊரடங்கில் தளர்வு…

424
0
Share

கொரோனா வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலி பெரும் பாதிப்பை சந்தித்தது. மேலும் கொரோனவால் முதன் முதலில் ஊரடங்கை அமல்படுத்தியது இத்தாலி தான்.

இதுவரை இத்தாலியில் மட்டும் கொரோனவால் 2.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 29 ஆயிரம் பேர் உயிரியிழந்துள்ளனர். ஆனால் கடந்த சில வாரங்கள் புதிதாக பாதிக்க படுவோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. எனவே 2 மாதங்களுக்கு பிறகு தற்போது ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளது.

lockdownஇந்த தளர்வில் உள்ளூர் பயணங்களுக்கு எந்த தடையும் இல்லை. உணவகங்களில் பார்சல் மட்டும் கிடைக்கும். பூங்காக்கள் திறக்கபடும். சிறு குறு தொழில்கள் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது.

இதனால் சற்று இயல்பு நிலைக்கு செல்கிறது. 40 லட்சம் பணியாளர்கள் தங்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். அவரவர் வீடுகளில் முடங்கி இருந்த மக்கள் முகக்கவசத்துடன் வெளிவருகின்றனர்.

ஆனால் புதிதாக நோய் தொற்றிற்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்தாலும் தினமும் 1500 உயிரிழக்கின்றனர் என்பது வருத்தமளிக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here