Home டெக்னாலஜிஸ் AUTOMATION விண்ணில் சீறிப்பாய்ந்தது கல்பனா சாவ்லா விண்கலம்!…

விண்ணில் சீறிப்பாய்ந்தது கல்பனா சாவ்லா விண்கலம்!…

567
0
kalpana chawla satelite launch
Share

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவின், இந்திய வம்சாவளி விஞ்ஞானியான மறைந்த கல்பனா சாவ்லா பெயரை தாங்கிய விண்கலம் விண்ணில் பாய்ந்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக சிக்னஸ் கார்கோ விண்கலத்தை அனுப்ப, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயரை இந்த விண்கலத்திற்கு சூட்டி, வியாழக்கிழமை இரவு விண்கலத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

ரஃபேல் கொடுத்துட்டாங்க!.. ஏவுகணையை மறந்துட்டாங்க!…

இறுதி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு கண்டறியப்பட்டதால், ராக்கெட் ஏவுவது தள்ளிவைக்கப்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

மேலும் புவியீர்ப்பு விசை முற்றிலும் இல்லாத கழிவறை ஒன்றை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான கருவிகள் அனுப்பப்படும் பொழுது சுமார் 169 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கழிவறையும் அனுப்பி வைக்கப்பட்டது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here