Home செய்திகள் இந்தியா ஷாவ்மி(Mi) நிறுவனம் வெளியிடும் வாய்ஸ் கன்ட்ரோல் ஸ்மார்ட் பல்பு !

ஷாவ்மி(Mi) நிறுவனம் வெளியிடும் வாய்ஸ் கன்ட்ரோல் ஸ்மார்ட் பல்பு !

477
0
Share

பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான ஷாவ்மி(Mi) பல்வேறு மொபைல் போன் நிறுவனங்களுக்கு சவால்விடும் வகையில் குறைந்த விலையில் ஏராளமான ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வருகின்றது. தற்போது அடுத்த கட்டமாக ஸ்மார்ட் LED பல்புகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிறுவனம் இதுவரை ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் டிவி போன்றவற்றை மட்டுமே அறிமுகம் செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது. தற்போது ஸ்மார்ட் பல்புகளையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் பல்ப்பானது வாய்ஸ் கண்ட்ரோல் உடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் வாயிலாகவும் இதனை கண்ட்ரோல் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பல்பின் முக்கிய அம்சமே வாய்ஸ் கண்ட்ரோல் தான் என்பதை உறுதிப்படுத்தி இந்த பல்புகளை வெளியிட்டுள்ளது.

பல்புகளின் முழு அமைப்பும் அதன் சிறப்பம்சங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

இந்த ஸ்மார்ட் பல்பை சாதாரணமாக B22 பல்பு ஹோல்டரில் பொருத்திக் கொள்ளலாம். இது பாலிகார்பனேட் மற்றும் பிளாஸ்டிக் கிளாட் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 16 மில்லியன் வண்ணங்கள் வரை இந்த இந்த பல்பு ஒளிரச் செய்யும். மொபைல் ஆப் செயலிகள் மூலமாகவும் Mi ஸ்மார்ட் பல்பை இயக்க முடியும்.

அதிலும் கூகுள் மற்றும் அலெக்ஸா போன்று வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியை கொண்டும் இந்த பல்பை இயக்க முடியும். இந்த அசிஸ்டெண்ட்களை கொண்டு சாதாரணமாக பேசிக்கொண்டே இந்த பல்பை இயக்கலாம். 9W பவர், 950 லுமினஸ் பிரைட்னஸ், 25,000 மணி நேரங்கள் நீடித்து உழைக்கும் தன்மை உடையது. 220V முதல் 240V வரையில் 0.07A இல் இயங்கும். இதன் விலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here