Home செய்திகள் இந்தியா ரஃபேல் கொடுத்துட்டாங்க!.. ஏவுகணையை மறந்துட்டாங்க!…

ரஃபேல் கொடுத்துட்டாங்க!.. ஏவுகணையை மறந்துட்டாங்க!…

349
0
Rafale
Share

பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து அதிநவீன ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்ட நிலையில் அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் வாங்கப்பட்டுள்ள அதிநவீன ரஃபேல் ரக விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதற்கான ஏவுகணைகள் மற்றும் அவற்றை இந்தியாவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டிய எம்பிடிஏ நிறுவனம் இன்னும் அதை வழங்காமல் இருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசா இல்லாமல் 16 நாடுகளுக்கு பயணிக்கலாம் : மத்திய அரசு தகவல்!…

ரஃபேல் விமானத்தில் பொருத்தும் ஏவுகணை ஆகியவை தொடர்பான உயர்தொழில்நுட்பங்களை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு குழுவிற்கு வழங்க தேவையான நடவடிக்கைகள் மற்றும் நினைவூட்டல்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தேஜஸ் விமானத்திற்கு எஞ்சின் தயாரிப்பு பணிக்கான தொழில்நுட்பத்தை பிரான்ஸ் இன்னமும் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here