Home செய்திகள் இந்தியா IPL தொடருக்காக JIO புதிய ப்ளான் வெளியிட்டுள்ளது…

IPL தொடருக்காக JIO புதிய ப்ளான் வெளியிட்டுள்ளது…

386
0
IPL-2020
Share

IPL தொடர்க்காக JIO புதிய ரீசார்ஜ் திட்டங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் IPL கிரிக்கெட் போட்டி நடத்தப்படும்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகத் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த IPL கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அமீரகம் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் அடுத்த மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் இல்லாமல் இந்த தொடரை நடத்தப்படும் என்று இது வரை IPL நிர்வாகம் தெரிவித்துவருகிறது.

பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்படுவதால் ஆன்லைன் வாயிலாகப் பார்ப்பவர்களும் தொலைக்காட்சி வாயிலாகப் பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அனைவரும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஒன்றரை மாதம் இந்த போட்டிகள் நடைபெறும் என்பதால் கூடுதல் இன்டர்நெட் தேவைப்படும் என அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் கூகுள் ப்ளே ஸ்டோரில் புதிய செயலியைச் சேர்த்துள்ளார்.

எனவே கூடுதல் இன்டர்நெட் சேவை வழங்க JIO தற்போது புதிய இரண்டு திட்டங்களை வெளியிட்டுள்ளது. அவை 499 மற்றும் 777 ஆகிய ரீசார்ஜ் திட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த 499 பிளான் திட்டத்தின் கீழ் 1.5 gb தினசரி டேட்டா 56 நாட்களுக்கும் IPL சீசன் முழுவதும் காணலாம் என்று தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் பயனர்களுக்கு அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் போன்ற எந்த ஒரு சேவையும் இணைக்கப்படவில்லை. இந்த புதிய பிளான் ஒருவருடன் வேலிடிட்டி கொண்ட ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை இலவசமாக அளிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HotstarJIO777 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 5 GB கூடுதல் டேட்டாவுடன் 1.5 GB அதிவேக இன்டர்நெட் வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் JIO to JIO அன்லிமிடெட் வாய்ஸ் கால் பிற நெட்வொர்க் to ஜியோ நெட்வொர்க் 3000 FUP யுடன் ஒரு நாளைக்கு 100 sms என அனைத்தும் இந்த இந்தத் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல 499 திட்டத்தில் உள்ள ஹாட்ஸ்டார் ஒரு வருடத்திற்கான விஐபி சந்தாவை இலவசமாகக் காணலாம் என்று தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடங்கும் முன்னரே இந்த இரண்டு புது திட்டத்தை அறிவித்துள்ள JIO நிறுவனம் IPL தேதி நெருங்க வேறு ஏதாவது புதிய திட்டத்தை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here