Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் ஊரடங்கு நீட்டிப்பா ? எந்த தளர்வும் இல்லை !

ஊரடங்கு நீட்டிப்பா ? எந்த தளர்வும் இல்லை !

318
0
EPS
Share

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று பல்வேறு குழப்பங்கள் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 22 முதல் பல கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும்  கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை.
தற்போது ஜூன் 30 வரை ஊரடங்கு  நாடு முழுவதும் அமலில் உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவான பகுதிகளில் ஏராளமான தளர்வுகளும் அளிக்கப்பட்டு வந்தன.
tamilnaduஇதனையடுத்து தற்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று பல தரப்பினரும் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ஆம் தேதி மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதன்பிறகு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதாவது கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியில் வர அனுமதிக்கப்பட்டிருந்தது.
chennaiஇந்த மாவட்டங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை எந்தவித தளர்வும் இன்றி ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரயில் சேவை, விமானச் சேவை என பொது போக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் 12 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பள்ளிகள் திறப்பும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகப் பொதுமக்கள் மத்தியில் நம்பப்படுகிறது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here