Home செய்திகள் இந்தியா PUBG யை கால் ஆஃப் டியூட்டி மிஞ்சியுள்ளது..

PUBG யை கால் ஆஃப் டியூட்டி மிஞ்சியுள்ளது..

558
0
pubg
Share

இந்தியாவில் பஜ்ஜியை விட கால் ஆஃப் டியூட்டி அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை அடுத்து இந்தியாவில்தான் அதிகமான பயனர்கள் இந்த கேம்ற்கு உள்ளனர்.

ஆண்ட்ராய்ட் தொடங்கிய காலத்திலிருந்தே கேம்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தொடங்கிய காலத்தில் கேண்டி க்ரஷ், டெம்பிள் ரன் என பல கேம்கள் பொதுமக்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகின.

நாளுக்கு நாள் டெக்னாலஜி வளரும் போது இளைஞர்களை ஈர்க்கும் வகையில் துப்பாக்கி சுடும் கேம்கள் ட்ரெண்டாக ஆரம்பித்தன. அதில் ஒன்று தான் இந்த PUBG. முதலில் மினி மிலிடியா என்ற ஒரு சூட்டிங் கேம் கல்லூரி இளைஞர்களிடமும் பிரபலமடைந்தது.

அதனைத் தொடர்ந்து அதைவிட சற்று தொழில்நுட்பரீதியில் மேம்படுத்தப்பட்டு PUBG என்ற ஒரு புதிய கேம் ஆப் வெளியிடப்பட்டது. வெளியிட்ட சிறிது காலத்திலேயே இந்த கேம் ஆப் உலகம் முழுவதும் பிரபலமடைந்து விட்டது.
இதற்கு போட்டியாக கால் ஆஃப் டியூட்டி என்ற கேம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த கேம் பல வருடத்திற்கு முன்பு கம்ப்யூட்டரில் விளையாடும் வகையில் இருந்தது. அப்போதும் இந்த கேம்யை நிறைய பேர் விளையாடினர். ஆனால் தற்போது இந்த கேம் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

அது மட்டுமின்றி இந்த கால் ஆஃப் டியூட்டி PUBGயை போன்றே சுற்றுவட்ட நண்பர்களுடன் ஆன்லைன் வாயிலாக இணைந்து விளையாடலாம் என்பதால் இந்த கேம் அதிக அளவு பதிவிறக்கங்களை பெற்றது.

இது வரை 25 கோடிக்கும் அதிகமானோர் இந்த கேம் ஆப்யை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று நிறுவனமே தெரிவிக்கின்றது. ஆனால் அமெரிக்காவை காட்டிலும் இந்தியாவில் இந்த கேம் சற்று குறைவாகத்தான் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது

ஆனால் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இது நாள் வரை PUBG கேம்யை விட கால் ஆஃப் டியூட்டி அதிக அளவு பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. PUBG 23.5கோடி பதிவிறக்கம் தான் கால் ஆஃப் டியூட்டி 25 கோடி பேர் பதிவிறக்கியுள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here