Home செய்திகள் இந்தியா ட்ரொன் பயன்படுத்தி 5G இணையம் ! சாம்சங் புது முயற்சி..

ட்ரொன் பயன்படுத்தி 5G இணையம் ! சாம்சங் புது முயற்சி..

382
0
Share

வருங்காலத்தில் 5G இணையம் அறிமுகப்படுத்த பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது. அதில் சாம்சங் நிறுவனம் ஒரு படி மேல் சென்று டவர்களை கண்காணிக்க ட்ரொன் பயன்படுத்தும் முயற்சியின் சோதனையில் வெற்றியும் கண்டுள்ளது.
ஆம், வேகமாக வளர்ந்து வரும் இணையம் பயன்பாட்டில் நாளுக்கு நாள் புது புது கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் மொபைல் போன்களும், இணையம் சார்ந்த பொருட்களும் பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. ஆனால் அதன் இணையம் வழங்கும் டவர் கோபுரங்கள் பராமரிப்புக்கு பணியில் இன்னும் மனிதர்கள் தான் உள்ளனர்.
5Gஇந்த உயரமான டவர் கோபுரங்களை பராமரிக்கும் போது ஏதாவது ஒரு சில அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. இதனால் உயிர் போகும் வாய்ப்பும் உள்ளது என்பதால் இதற்கு மாற்று முயற்சியில் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டிருந்தது.
அதற்காக ட்ரொன் மூலம் டவர் கோபுரங்களை கண்காணிக்க முடிவெடுத்து அதற்காக ஏராளமான நடவடிக்கை எடுத்தனர். மேலும் இதன் சோதனை ஓட்டத்தில் வெற்றியும் கண்டுள்ளனர்.
5Gஆம் இந்த ட்ரொன் மூலம் டவர் கோபுரங்கள் கண்காணிக்க ட்ரொன் பறக்க விட்டு அதில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளதா என்பதையும் கண்டறித்து அந்த தகவலை உரிய நிறுவனத்திற்கு செலுத்தும்  என்று  சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here