Home செய்திகள் இந்தியா சீனாவை முந்திய இந்தியா ?  இந்தியாவிற்கு இலவசமாக வெண்டிலேட்டர் வழங்கிய அமெரிக்கா ! 

சீனாவை முந்திய இந்தியா ?  இந்தியாவிற்கு இலவசமாக வெண்டிலேட்டர் வழங்கிய அமெரிக்கா ! 

447
0
india america
Share

உலக நாடுகள் அனைத்தும் தற்போது உயிர்பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் நோய்க்குப் பேர் தான் கொரோனா.
நாளுக்கு நாள் இதன் பரவல் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதுவரை இந்த நோய்க்கு உலகளவில் 47 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்த பாதிப்பில் உலக நாடுகள் பட்டியல் தரவரிசையில் சீனாவை முந்தியது இந்தியா. ஏனென்றால் இதுவரை சீனாவில் 83 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்தியாவில் மட்டும் 87 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை குறைவு   தான். மேலும் இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் பரவல் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

modi trumph

இந்நிலையில் தற்போது  அமெரிக்கா அதிபர் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்தியாவிற்கு இலவசமாக வென்டிலேட்டர்கள் கருவிகளை வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது என்றும் கொரோனவுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க 2 நாடுகளும் இணைந்து விரைவில் கண்டறிய இருப்பதாகவும், கண்ணுக்குத் தெரியாத எதிரியை ஒன்றிணைந்து வீழ்த்துவோம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

டாஸ்மாக் மூடியதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை ! தமிழக அரசு டோக்கன் தயாரிப்பில் மும்முரம்..

இதனால் பிரதமர் நரேந்திர மோடி டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவித்து பதில் ட்வீட் செய்துள்ளார். பிரதமர் மோடியின் டீவீட்டில் கூறி இருப்பதாவது :
டொனல்டு டிரம்ப்பிற்கு நன்றி, இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வருகிறோம். இத்தகைய நேரங்களில், நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதும், நமது உலகத்தை ஆரோக்கியமாகவும், கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடவும் முடிந்தவரைப் போராட வேண்டியது அவசியம். இந்தியா- அமெரிக்கா  இடையேயான நட்பிற்கு அதிக சக்தி உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறி உள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here