Home செய்திகள் இந்தியா டாஸ்மாக் மூடியதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை ! தமிழக அரசு டோக்கன் தயாரிப்பில் மும்முரம்..

டாஸ்மாக் மூடியதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை ! தமிழக அரசு டோக்கன் தயாரிப்பில் மும்முரம்..

303
0
Share

உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் மேல்முறையீட்டு மனு விசாரணையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
tasmac closedதமிழகத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து  பிறப்பிக்கப்பட்ட  ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் அண்டை மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறந்ததால்  தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் மே 7ல் திறக்கப்பட்டன. ஆனால் கட்டுப்பாடுகள் சரியாக கடைப்பிடிக்காததால் மீண்டும் கடைகளை மூட வேண்டும்  என்று பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதனை தொடர்ந்து உயர் நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் திறக்கக்கூடாது என்று தீர்ப்பளித்தது.
high courtதமிழக அரசு இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த இன்று விசாரணை செய்யப்பட்டது  அதில் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
எனவே தமிழக அரசு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்க தயார் ஆகின்றனர். அதில்  கூட்டத்தைக் குறைக்கும் வகையில் டோக்கன் முறை அறிமுகப்படுத்த 7வண்ணங்களில் தயார்ப்படுத்தியுள்ளது.
ஆனால் எப்போது தீர்ப்பு வரும் என்று இன்னும் தெளிவாகத் தெரியாமல் குடிமகன்கள் ஆவலுடன்  காத்திருக்கின்றனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here