Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் படிக்கும் பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு ! பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம் ….

படிக்கும் பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு ! பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம் ….

398
0
students
Share

கொரோனா பரவலால் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கினால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கபட்டது.அதனை தொடர்ந்து கடந்த வாரம் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவித்தது.

சீனாவை முந்திய இந்தியா ?  இந்தியாவிற்கு இலவசமாக வெண்டிலேட்டர் வழங்கிய அமெரிக்கா ! 

எவ்வாறு தேர்வு மையங்கள் அமைப்பது மற்றும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வரவழைப்பது போன்ற சிக்கல்கள் அதிகமாக காணப்பட்டது. மாணவர்கள் அதிகம் கூடாமல் அதே நேரத்தில் தேர்வும் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து அறிவிப்பு வெளிவந்துள்ளது.

DPI

அதில் தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 3,000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் சிரமத்தை குறைக்க, தற்போது 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதேபோன்று ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள் என்றும், தேர்வுப்பணியில் அனைத்து ஆசிரியர்களும் ஈடுபடுத்த உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here