Home செய்திகள் இந்தியா ஐபிஎல் 2020 அட்டவணை இன்று வெளியீடு சென்னை – மும்பை அணிகள் முதல் போட்டியில்...

ஐபிஎல் 2020 அட்டவணை இன்று வெளியீடு சென்னை – மும்பை அணிகள் முதல் போட்டியில் மோதலா ?

703
0
Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆனால் இது வரை ஐபிஎல் 2020 தொடரின் அட்டவணை வெளியாகவில்லை.

ஆனால் ஐபிஎல் இல் விளையாட உள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களும் துபாயில் தங்களை தற்போது தனிமைப்படுத்தும் நாட்களை முடித்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகாததால் ரசிகர்கள் வருத்தத்திலும், குழப்பத்தில் உள்ளனர்.

எலக்ட்ரானிக் டூத் பிரைஷ் – ரியல் மீ அறிமுகப்படுத்துகிறது..

தற்போது ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியாகும் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். எனவே கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியும் ரன்னர் பட்டம் பெற்ற சென்னை அணியும் முதல் போட்டியில் விளையாடுமா என இன்று வெளியாகும் அட்டவணையில் தெரியவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here