Home செய்திகள் இந்தியா அதிரடி சலுகையில் கோடிகளை அள்ளும் ஆன்லைன் வியாபாரம்…

அதிரடி சலுகையில் கோடிகளை அள்ளும் ஆன்லைன் வியாபாரம்…

689
0
Share

முன்னணி ஆன்லைன் விற்பனையாளர்களான அமேசான், பிளிப்கார்ட் நடத்திய பண்டிகை கால சிறப்பு விற்பனையில் பல ஆயிரம் கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான விளங்கும் அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன் விற்பனையாளர்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டு அசத்தல் சலுகைகளுடன் கூடிய சிறப்பு விற்பனையை நடத்தி வருகின்றது.

இது போன்ற பண்டிகை கால விற்பனையில் இது போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சுமார் ரூ. 47 ஆயிரம் கோடி ரூபாய் வரை விற்பனை செய்து வருவாயை அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஈட்ட முடியும் என்று நுகர்வோர் செலவீனம் பற்றி ஆய்வு செய்யும் பிரபல நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.

மேலும் இந்த ஒட்டு மொத்த தொகையில் கிட்டத்தட்ட 75 சதவீதம், தோராயமாக ரூ. 35,400 கோடிகள் அக்டோபர் 15 முதல் அக்டோபர் 21 வரையிலான காலக்கட்டத்தில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் நுகர்வோர் செலவு செய்து இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

பருவ மழைக்காலம் தொடங்கியது.. ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் ?

சமீபத்தில் நடத்திய ஆன்லைன் விற்பனையில் மட்டும் சுமார் 5.5 முதல் 6 கோடி பயனர்கள் கலந்து கொண்டு வியாபாரம் நடைபெற்றிருக்கும் என்றும், இந்த ஆண்டு பண்டிகை கால விற்பனை அதிகபட்சம் 34 சதவீத வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது போன்ற ஆன்லைன் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் தான் அதிக பயனர்களால் விரும்பப்படும் சாதனமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here