Home செய்திகள் இந்தியா தமிழகத்தில் ஆப்பிள் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ! 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு…

தமிழகத்தில் ஆப்பிள் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ! 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு…

339
0
foxconn
Share

தமிழ்நாட்டில் சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஃபாக்ஸ்கான் என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த  தொழிற்சாலையிலிருந்து தான் உலகின் பிரபலமான ஆப்பிள் ஸ்மார்ட்போன் தயாரிக்கத் தேவையான உதிரிப்பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படியிருக்க இந்த ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் மேலும் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.foxconn

இவ்வாறு முதலீடு செய்வதால் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை விரிவுபடுத்தப்படும் என்றும் விரிவுபடுத்தப்பட்ட பிறகு அதில் ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய  6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தோராயமாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆப்பிள் XR மாடல் இந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

அமெரிக்கா – சீனா இடையே ஏற்கனவே வர்த்தக போர் நடைபெற்று வந்தது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமான நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி வருகின்றன. இத்தகைய நேரத்தில் இந்த முதலீடும் சீனாவில் உள்ள ஆப்பிள் போன் தயாரிப்பைக் குறைத்துக்கொண்டு இந்தியாவில் அதிகப்படுத்தத்  திட்டமிடப்பட்டுள்ளன.

அதனால் தான் தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆப்பிள் உதிரிப்பாகங்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் மேலும் முதலீடு செய்யும் திட்டமாக உள்ளது. இதற்கு முன்பு சீனாவில் தயாரிக்கப்படும் போது அதற்குத் தேவையான உதிரிப்பாகங்கள் இங்குள்ள  ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

தற்போது ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஆப்பிள் ஸ்மார்ட் போன் தயாரிப்பும் ஏற்பட்டால் இந்தியாவில் ஐ போன்களின் விலை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி வியாபாரம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிற்கு ஒரு நல்ல வளர்ச்சி கிடைக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here