Home செய்திகள் இந்தியா விஷுவல் சைன்ஸ் பிக்சன் தொழில்நுட்பத்தில் இந்தியத் திரைப்படம்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா ?

விஷுவல் சைன்ஸ் பிக்சன் தொழில்நுட்பத்தில் இந்தியத் திரைப்படம்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா ?

716
0
Share

தற்போது தமிழ் சினிமாவை தாண்டி மக்கள் ஹாலிவுட் திரைப்படங்களையும் ரசிகர் துவங்கியுள்ளனர். அதனால் தற்போது தமிழ் சினிமாவிலும் பல்வேறு புது புது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது. அந்த வகையில் தான் கோச்சடையான் எனும் சூப்பர் ஸ்டாரின் படம் 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டது.

தற்போது ஜதுரா எனும் படத்தை முழுக்க முழுக்க விஷுவல் எபெக்ட்ஸுடன் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

ஜதுரா என்ற தமிழ் மொழி திரைப்படத்தை இந்தியாவில் முதல் முறையாக ரியல் டைம் VFX தொழில்நுட்பத்தின் விர்சுவல் புரொடக்‌ஷன் முறையில் படமாக்க வேண்டும் முடிவெடுத்துச் செயல்படுத்தியும் வருகின்றனர். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், தரத்திலும், திரைத்துறையில் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழில்நுட்பம் இந்திய சினிமாவில் முதல் முயற்சியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்படியிருக்க இந்த ஜதுரா திரைப்படத்தை சந்திராம்பா தியேட்டர்ஸ் சார்பாக முத்துக்கிருஷ்ணன் தயாரித்து வருகிறார்.ஆர்.ஜே.பார்த்திபன் இப்படத்தை இயக்குகிறார். வி.எப்.எக்ஸ் இயக்குநராக பெமில் ரோஜர் பணியாற்றுகிறார். இரட்சகன் ஸ்ரீதர் இசையமைக்கும் இப்படத்திற்கு மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஜெனிபர் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். மைக்கேல் ராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

திருமணமாகும் மகனுக்குத் தாய் செய்த வினோத செயல்…

இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள், கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். ஆனாலும் இது நாள் வரை இந்த படத்தில் யார் யார் நடித்து வருகிறார்கள் என்ற தகவல் வெளிவராமல் ரகசியமாகவே இருந்தது வருகிறது. விரைவில் நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. மேலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here