Home செய்திகள் இந்தியா எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண ஆயத்தமாகிறது இந்தியா – சீனா!…

எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண ஆயத்தமாகிறது இந்தியா – சீனா!…

300
0
Indian Army Ladakh
Share

லடாக் எல்லைப் பிரச்சனை இந்தியா, சீனா நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் நிலையில், இதற்கு சுமூக தீர்வு காண 7வது சுற்று பேச்சுவார்த்தைக்கு இருநாட்டு ராணுவமும் தயாராகி வருகிறது.

லடாக் எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா-சீனா நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் நிலையிலான 6வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மாதம் 21ம் தேதி நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் பதற்றத்தை தணிக்க கூடுதலாக படைகளை அனுப்பி வைப்பதை இருநாடுகளும் நிறுத்தி கொள்வது, இருநாடுகளின் உறவுகளில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

லடாக்கில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க இந்தியா – சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் நேரில் சந்திப்பு !

மேலும், கடந்த செப்டம்பர் 10ம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் போது, எல்லையில் அமைதியை நிலைநாட்ட 5 அம்ச உடன்பாட்டை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இருநாட்டு ராணுவ உயரதிகாரிகளும் அடுத்த கட்டமாக 7வது சுற்று பேச்சுவார்த்தைக்கான பணிகளுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டால் மட்டுமே, இருநாடுகளும் தங்களது படைகளை லடாக் எல்லையில் இருந்து முழுமையாக வாபஸ் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here