Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் வாரம் ஒருமுறையாவது கருணைக்கிழங்கை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்!..

வாரம் ஒருமுறையாவது கருணைக்கிழங்கை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்!..

533
0
karunai kizhangu
Share

கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன இந்த சத்துகள் அனைத்தும் உடலின் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்து, உடலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

வாரமொருமுறை கருணைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் அமில சுரப்பை சீராக்குவதோடு, பசியின்மை பிரச்சனையை தீர்க்கிறது.

பெண்களை உடலளவிலும் மனதளவிலும் களைப்படைத்து உடல் சத்து இழப்பு மற்றும் சோர்வு ஏற்படுகிறது. இச்சமயங்களில் பெண்கள் கருணைக்கிழங்கு உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகும் கொள்ளு!…

மூலம் நோய் ஏற்பட்டவர்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக கருணை கிழங்கு இருக்கிறது.

மலச்சிக்கல், குடலில் புண்கள் போன்றவை ஏற்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை கருணை கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் மூலம் காரணமாக குடலில் ஆசனவாயில் ஏற்பட்டிருக்கும் புண்களை விரைவில் ஆற்றுகிறது. நெடுநாள் மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது.

இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு நீண்ட ஆயுட்காலம் உண்டாகிறது. ஊட்டச்சத்து கிழங்கு வகைகள் பெரும்பாலும் மனிதர்களுக்கு தேவையான சத்துகளை தருவதாக இருக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here